உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் ஜோகோவிச் !!

உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முதலிடம் பிடித்துள்ளார். ஜோகோவிச் 8,045 புள்ளிகள் எடுத்டு ஒரு இடம் முன்னேறி ஆடவர் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

djokovic

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,480 புள்ளிகள்) 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,020 புள்ளிகள்) 3வது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (5,300 புள்ளிகள்) 4வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே (5,085 புள்ளிகள்)ன் 5வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (4,310 புள்ளிகள்) 6வது இடத்திலும், குரோஷியா மரின் சிலிச் (4,050 புள்ளிகள்) 7வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (3,895 புள்ளிகள்) 8வது இடத்திலும் தொடருகின்றனர்.

ஜப்பான் வீரர் நிஷிகோரி (3,390 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,155 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷிய வீரர் காரென் கச்சனோவ் 7 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.