விம்பிள்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய செரீனா

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். லண்டன் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் செரீனா வில்லியம்ஸ் ரஷ்யா வீராங்கனையான எவ்ஜெனியா ரோடினாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 6-2, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரோடினாவை வீழ்த்தி செரீனா அசத்தினார்.
serena
2015 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிப்பெற்று சாம்பியனான செரீனா தற்போது நடைபெற்று வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மகப்பேறு காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை செரீனா இழந்தார். இந்நிலையில் தாயான பின்பு நடைபெறும் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் செரீனா வெற்றியடைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

”அனைத்தையிலும் சரியாக இருக்க விரும்பும் நான், சிலவற்றில் தவறானவற்றை கண்டுப்பிடித்துள்ளேன். இந்த போட்டிகள் எனக்கு மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. நேர்மையாக இருப்பது விளையாட்டை காட்டிலும் கடினமான ஒன்றாக இருக்கிறது” என்று செரீனா கூறியுள்ளார்.

செரீனாவிற்கு தனது மகளான ஒலிம்பியா பிறந்த பிறகு சில பிரச்சனைகள் எழுந்தன. இதன் காரணத்தினால் டென்னிஸ் போட்டியில் இருந்து சில நாட்கள் செரீனா ஓய்வு பெற்றிருந்தார். மீண்டும் விம்பிள்டன் போட்டிக்கு திரும்பிய செரீனா தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்து நடைபெற உள்ள 25வது போட்டியில் செரீனா அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான ரோடினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் செரீனா இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்றால் 24வது கிராண்ட் ஸ்லாம் போட்டியின் பட்டத்தை பெறுவார்.

உலக தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள கார்பின் முகுருசா, மரியா ஷரபோவா, ஹாலேப், பெட்ரா விடோவா, வீனஸ் வில்லியம்ஸ், கரோலின் விஸ்னியாகி, ஸ்லோன் ஸ்டீபென்ஸ் உள்ளிட்ட வீராங்கனைகள் விம்பிள்டன் தொடரில் தோல்வியை தழுவி வெளியேற்றப்பட்டது இதுவே முதல்முறை.