விம்பிள்டன் டென்னிஸ்; இறுதிபோட்டிக்கு செரீனா முன்னேற்றம்

லண்டன்:

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே செரீனா வில்லியமஸ் அதிரடியாக விளையாடினார். முதல் செட்டை 6-&2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றார். 2வது செட்டில் செரீனாவிற்கு ஜூலியா எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. எனினும் செரீனா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 6&-4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுக்கு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் மற்றொரு ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை செரீனா எதிர்க்கொள்கிறார்.