நடுவரை ‘பொய்யன் -திருடன்’ என திட்டிய செரினா வில்லியம்ஸ்!

மெரிக்க ஓபன் டென்னிஸில் பட்டத்திற்கான போட்டியின்போது  செரினா வில்லியம்ஸ், “பொய்யன், திருடன்” என்று நடுவரை நடுவரை திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனை செரினா வில்லியம்ஸை வீழ்த்திய ஜப்பானின் ஒசாகா வெற்றி பெற்றார். போட்டியின் போது செரினாவுக்கு எதிராக புள்ளி ஒன்றை நடுவர் செர்ஜியோ ரமோஸ் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த செரினா, நடுவரிடம் சென்று முறையிட்டார். பிறகு, நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது  நடுவரை திருடன் என அவர் திட்டினார். மேலும் பொய்யன் என்றும் விமர்சினத்தார்.

இதற்கு மன்னிப்பு கோருமாறு நடுவர் வற்புறுத்தினார்.

அதற்கு மறுத்த செரினா தமது நடத்தையை நடுவர் தவறாக சித்தரிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். இனி தான் விளையாடும் எந்தப் போட்டியிலும் ரமோஸ் நடுவராக இருக்கக் கூடாது என்றும் செரினா கூறினார்.

மேலும், தவறான வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நடுவரை கடுமையாக விமர்சித்தது, மட்டையை தூக்கி எறிந்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நடுவரால் செரினா மூன்று முறை எச்சரிக்கப்பட்டார்

 

கார்ட்டூன் கேலரி