யு.எஸ். ஓபன் டென்னிஸ் – வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்..!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செரினா வில்லியம்ஸ் தோல்வியடைந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

அரையிறுதிப் போட்டியில், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அஸரன்காவுடன் மோதினார். இதில், 6-1, 3-6, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். போட்டியின் நடுவில் இவருக்கு கணுக்காலில் சற்று பிரச்சினை ஏற்பட்டது.

இந்தத் தோல்வியின் மூலம், 24வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லக்கூடிய அவரின் ஆசை நிராசையாகியுள்ளது.

மற்றொரு மகளிர் ஒற்றையர் அரையிறுதியில், அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினர். இதில் ஒசாகா வென்றார்.

இதன்மூலம், இறுதிப் போட்டியில், அஸரன்கா – ஒசாகா மோதுகின்றனர்.