தனது செல்ல மகளுக்கு கருப்பு நிற பொம்மையை பரிசளித்த செரீனா!

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீன வில்லியம்ஸ் தனது ஒரு வயது மகளுக்கு கருப்பு நிறத்திலான பொம்மையை பரிசளித்துள்ளார். இதனால் செரீனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ‘

serena

23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ரெட்டிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஒஹானியனை காதலித்து வந்த நிலையில் செரீனாவின் திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் செரீனா ஒலிம்பியா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஓராண்டு விடுமுறைக்கு பிறகு செரீனா மீண்டும் டென்னிஸ் மீது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மெல்போர்ன் நகரில் நடக்க் உள்ள 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவதற்காக செரீனா தயாராகி வருகிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக செரீன மெல்போர்ன் சென்றுள்ளார்.

செரீனா தனது குழந்தையுடன் எடுத்து சென்ற குவாய் குவாய் பொம்மைக்கு இன்ஸ்டாகிராமில் தனிப் பக்கமே உள்ளது. இதனை சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். அதில் குவாய் குவாய் குறித்து ”செரீனா வீல்லியம்ஸ் மற்றும் ஒஹானியனின் பேத்தி” என்றும் ”மகள் ஒலிம்பியாவின் செல்லத் தோழி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் தனது ஒருவயது மகளுக்கு செரீனா வில்லியம்ஸ் கருப்பு நிறத்திலான குவாய் குவாய் பொம்மையை பரிசளித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய செரீனா வில்லியம்ஸ், ”குவாய் குவாய் பொம்மையை அலெக்சிஸுக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறேன். முதன்முதலாக அவளுக்குக் கருப்பு நிற பொம்மையை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருந்தேன். நான் வளரும்போது கருப்பு பொம்மைகளை வைத்து விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த வாய்ப்பை என் மகளுக்கு அளித்திருக்கிறேன். மரபுரீதியாக அவள் கலப்புதான். கெளகேசியன் மற்றும் கருப்பினத்தில் கலவை அவள். அவளுக்கு முதல் பொம்மை கருப்பு நிறத்திலும் இரண்டாவது பொம்மை கெளகேசியனாக இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தேன். மனிதர்கள் என்ன நிறத்தில் இருந்தாலும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்பதை அவளுக்குச் சொல்லிக் கொடுப்பதே இதன் நோக்கம்” என தெரிவித்தார்.

தனது மகளுக்கு கருப்பு நிற பொம்மையை பரிசளித்ததால் செரீனாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.