நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே, இத்தொடரின் 4வது சுற்றுக்கு முன்னேறிய செரினா, அச்சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை எதிர்த்து ஆடினார். அப்போட்டியின், முதல் செட்டை 6-3 என்று கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டை 6-7 என்று மயிரிழையில் இழந்தார்.

அதேசமயத்தில், மீண்டும் சுதாரித்து மூன்றாவது செட்டை 6-3 என்று கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், இவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்குள் நுழைவது இது 53வது முறையாகும்.

மேலும், இந்தப் போட்டி நடக்கும் ஆர்தர் ஆஷ் மைதானத்தில் இவர் பதிவுசெய்த 100வது வெற்றியாகும் இது.