யு.எஸ். ஓபன் – அரையிறுதிக்குள் நுழைந்தார் செரினா வில்லியம்ஸ்!

--

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், செரினா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

அவருடன், பெலாரஸ் நாட்டின் அஸரன்கா மற்றும் ஆஸ்திரிய நாட்டின் டொமினிக் தியம் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

பல்கேரியாவின் பிரான்கோவாவுடன் காலிறுதியில் மோதினார் செரினா வில்லியம்ஸ். இப்போட்டியில், முதல் செட்டில் தோற்ற செரினா, இரண்டாவது & மூன்றாவது செட்டை வென்றதன் மூலம், 4-6, 6-3 மற்றும் 6-2 என்ற கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில், பெல்ஜியத்தின் எலீஸை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றார் பெலாரஸின் அஸரன்கா.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், ஆஸ்திரிய நட்சத்திரம் டொமினிக் தியம், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.