Random image

அமெரிக்க ஓபன் தொடர்: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், கரோலினாவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையும், சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து போட்டியிட்டார்.

serena

போட்டியின் தொடக்கத்டில் தடுமாறிய செரீனா, சில நிமிடங்களில் அபாரமாக விளையாட தொடங்கினார். கரோலினாவை 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி செரீனா வெற்றிப்பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரையிறுதி சுற்றில் செரீனா, லத்வியா வீராங்கனை செவஸ்டோவவை எதிர்த்து விளையாட உள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றில் செரீனா தொடர்ந்து 9வது முறையாக அரையிறுதி சுற்றுக்கு சென்றுள்ளார். எனினும், அரையிறுதி சுற்றில் செரீனாவிற்கு கடும் சவாலை தருவதற்காக லத்வியாவின் வீராங்கனை காத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு குழந்தையை பெற்றெடுத்த பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்கும் செரீனா, அதன் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.