மேல் ஆடையின்றி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வீடியோ பாடல் வெளியீடு….செரீனா வில்லயம்ஸூக்கு குவியும் பாராட்டு

--

வாஷிங்டன்:

மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செரீனா வில்லியம்ஸ் மேல் ஆடையின்றி பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்க டென்னிஸ் வீராங்கணை செரீனா வில்லியமஸ் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு பாடலை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

“ஐ டச் மைசெல்ப்” என்ற பாடலை பாடி விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பாடலை எழுதிய ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப் புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார். தற்போது இந்த பாடலை தான் செரீனா பாடியுள்ளார். இந்த பாடடை மேல் ஆடை இல்லாமல் தனது மார்பகங்களில் கை வைத்தபடி இதை பாடியுள்ளார்

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும். மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் செரீனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவரது ரசிகர்கள் மற்றும் பெண்கள் பலர் சமூக வலை தளங்களில் செரீனாவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ வெளியான 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed