பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

உலக டென்னிஸ் விளையாட்டில் சூப்பர் ஸ்டாராக விளையாடி வரும்  செரினா வில்லியம்ஸ் தனது காதலர், ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியானுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

தற்போது 36 வயதாகும் செரினா கர்ப்பம் காரணமாக சில மாதங்களாக விளையாடுவதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் பிரசவ வலி காரணமாக கடந்த புதன்கிழமை புளோரிடாவில், வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள தூய மேரி மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  உ அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

புதிதாக பிறந்துள்ள குட்டி செரினாவுக்கு அவரது ரசிகர்களும், உறவினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.