ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்…செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்

--

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினர்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனசை வீழ்த்தினார்.

செரினா வில்லியம்ஸ் வெல்லும் 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு பட்டம் வென்றால் உலக சாதனையை அவர் சமன் செய்யவுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் வெல்லும் 7-வது பட்டம் இது.