புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் தேதியை வெளியிட்ட கலர்ஸ் தமிழ் ….!

 

ஊரடங்கில் கடந்த 1-ம் தேதி முதல் பழைய படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் புதிய எபிசோட்கள் 20-ம் தேதி திங்கள் கிழமை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலர்ஸ் டிவி நிர்வாகம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

Press Release – COLORS Tamil’s popular fiction show Thirumanam is back with new episodes

ஓவியா:

இந்த வார துவக்கத்தில் 400 அத்தியாயங்களை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தொடர் அனைவரிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடராகும்.

அம்மன்: அம்மன் மீது அதீத பக்தி கொண்ட சக்தி என்ற பெண், நீதிபதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறாள். சக்தியின் கடும் பிரார்த்தனையின் காரணமாக பார்வதி தனது கணவரை மீட்டாரா? இல்லையா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அம்மன் தொடரை பாருங்கள்.

இதயத்தை திருடாதே:

சகானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். நீலகண்டனை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனரா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரை பாருங்கள்.

மாங்கல்ய தோஷம் :

தருண் நித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆறுமுகத்திடம் கூறுகிறார். அதற்கு ஆறுமுகம் மறுத்தபோதிலும், நித்யாவை திருமணம் செய்வதில் தருண் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ரகுவரன் நித்யாவை திருமணம் செய்ய ஒரு மகத்தான திட்டத்தை வகுக்கிறான். இந்த நிலையில் தருணிடம் இருந்து நித்யாவை திருமணம் செய்யத் துடிக்கும் ரகுவரனின் திட்டம் நிறைவேறுமா? நித்யா மற்றும் தருண் ஆகியோரின் தலைவிதி என்ன? என்பதைக் காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மாங்கல்ய தோஷம் தொடரை பாருங்கள்.

உயிரே :

செழியனும் பவித்ராவும் தங்கள் வாழ்க்கையை துவங்குகையில், பவித்ரா மீதான நரேனின் காதல் வலுவடைகிறது. இந்த நிலையில், நரேன் பிறந்த நாள் அன்று பவித்ராவும் நரேனும் நேருக்கு நேர் சந்திப்பதை தடுக்க செழியன் தந்திரம் செய்கிறான். மறைக்கப்பட்ட பவித்ராவின் உண்மையை சுந்தரபாண்டி வெளியே சொல்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உயிரே தொடரை பாருங்கள்.

திருமணம்:

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பது குறித்து தெரிந்தவுடன் ஜனனி மிகுந்த வேதனையடைகிறாள். சந்தோஷை தவிர்ப்பதற்காக அவள் சில நாட்கள் தன் தந்தையின் வீட்டில் தங்க முடிவு செய்கிறாள். இது அவர்களது திருமண வாழ்க்கையில் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதைக் காண உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திருமணம் தொடரை பாருங்கள்.

You may have missed