‘சீரி ஏ’ கால்பந்து – சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவின் யுவன்ட்ஸ் அணி!

டுரின்: ‘சீரி ஏ’ கால்பந்து தொடரில் யுவன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்தது. இந்த கிளப் அணியில் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடர்தான் ‘சீரி ஏ’ கால்பந்து தொடராகும்.

இத்தொடரில், யுவன்ட்ஸ் அணி, தான் இதுவரை ஆடியுள்ள 36 போட்டிகளில், 26 வெற்றி, 5 டிரா மற்றும் 5 தோல்விகள் என மொத்தமாக 86 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது.

யுவன்ட்ஸ் அணி, ‘சீரி ஏ’ கோப்பையை தொடர்ச்சியாக வெல்வது இது 9வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இக்கோப்பையை மொத்தமாக 36வது முறையாக இந்த அணி கைப்பற்றுகிறது. முதன்முறையாக 1905ம் ஆண்டு இக்கோப்பையை இந்த அணி கைப்பற்றியது.

கார்ட்டூன் கேலரி