வெஸ்ட்இன்டிஸ் உடனான தொடர் வெற்றி எனது மனைவிக்கான 2வது திருமண பரிசு! பரிசு! விராட் கோலி

மும்பை :

ந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த சிரிசை இந்திய அணி கைப்பற்றி உள்ளது. இதை தனது 2வது திருமண நாளின் பரிசாக தனதுக்கு மனைவிக்கு அர்ப்பணிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்து உள்ளார்.

நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இன்டிஸ் அணி அமோக வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சேர்ந்து 12 சிக்ஸர்கள் விளாசி வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1 – 1 என சமநிலையில் இருந்தன. நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2-1 என்ற கணக்கில் இந்தியா சிரிஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து கூறிய கேப்டன் விராட் கோலி, “இது ஒரு அழகான சிறப்பு இன்னிங்ஸ் மற்றும் எங்கள் இரண்டாவது திருமண ஆண்டுவிழாவாக இருந்ததால், இது ஒரு சிறப்பு பரிசு. இது ஒரு சிறப்பு இரவு என்றவர், இந்த வெற்றியை தனது மனைவிக்கு திருமண பரிசாக வழங்குவதாக தெரிவித்து  உள்ளார்.

நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த நிலையில்,  முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் குவித்தனர்.

ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்து வில்லியம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தன் பேட்டிங்கில் அவர் 6 ஃபோர், 5 சிக்ஸ் அடித்து இருந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 2 பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேற கேபடன் கோலி களமிறங்கினார். அவருடன் ராகுல் இணைந்த சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.

ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்த நிலையில், 240ரன்கள் குவித்திருந்தது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 7 சிக்ஸ் அடித்து மிரட்ட இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்தது. 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ஹெட்மையர் 41 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பொல்லார்டு அதிரடி ஆட்டம் கேப்டன் கீரான் பொல்லார்டு மட்டுமே தனி ஆளாக போராடினார். அவர் 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

வெ.இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் பதுவீச்சு அபாரமாக அமைந்தது. தீபக் சாஹர், ஷமி, வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் ஓவருக்கு 5 முதல் 6 ரன்கள் வரை மட்டுமே கொடுத்தனர். தீபக் சாஹர் 2, ஷமி 2, குல்தீப் 2, புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.  67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டி20 தொடரை 2 – 1 என கைப்பற்றியது.

91 ரன்கள் குவித்த ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார்.