3 ஆண்டுகளுக்குப் பிறகு WTA பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ்!

வெலிங்டன்: ஆக்லாந்து ஓபன் கிளாசிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார் செரினா வில்லியம்ஸ்.

நியூசிலாந்து நடைபெற்ற இந்த டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், செரினா வில்லிம்ஸுடன் மோதியவர் ஜெசிகா பெகுலா. இந்த மோதலில் ஆதிக்கம் செலுத்திய செரினா, 6-3, 6-4 என்ற நேர்செட்டுகளில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றினார்.

மூன்று ஆண்டுகள் கழித்து, WTA ‍டென்னிஸ் அரங்கில் இவர் பெறுகின்ற முதல் சாம்பியன் பட்டமாகும் இது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இவர் கோப்பை வென்றதோடு சரி.

அதன்பிறகான காலங்களில், விம்பிள்டன், கனடா ஓபன், அமெரிக்க ஓபன் உள்ளிட்ட 5 தொடர்களில் இவரால் சாம்பியன் ஆக முடியவில்லை.

இப்போட்டியில் கிடைத்த ரூ.30 லட்சம் பரிசுத்தொகையை இவர் ஆஸ்திரேலிய காட்டுத் தீ நிவாரணத்திற்கு அளித்துவிட்டார் மற்றும் தான் முதல் சுற்றில் தான் பயன்படுத்திய உடையில் கையெழுத்திட்டு, அதை ஏலம் விடுவதன்மூலம் வரும் தொகையையும் காட்டுத் தீ நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளார்.