முன்னாள் மத்தியஅமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்!

டில்லி:

டல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி கடந்த 10ந்தேதி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில்,  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அருண்ஜெட்லியின் உடல்நிலை சீராக இருந்த நிலையில் தற்போது  பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

பாஜக . மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி  கடந்த சில ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். இதன் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும் போட்டியிட மறுத்து விட்டார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது  உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோரும் அவரைப் பற்றி நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் அருண்ஜெட்லியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aiims hospital, Arun JAitley, Former Union Minister
-=-