நடிகர் சங்க தேர்தலில் விஷால் டீமில் நானா ? : கிண்டலடிக்கும் ராதிகா

2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் முடிந்தும் நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால் தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.தற்போது அந்த காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கபட்டார் .

நாசர் மீண்டும் தங்களது அணி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்த அணிக்கு எதிராக நடிகை ராதிகா தலைமையில் சிம்பு, உதயா உள்ளிட்டவர்கள் அடங்கிய அணி களம் இறங்கப் போவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விஷால், சரத்குமார் மற்றும் ராதிகாவை ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசியிருப்பதாகவும் , இதனால் விஷால் அணியில் ராதிகா இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதை மறுத்திருக்கிறார் ராதிகா, ”Seriously ?” எனகிண்டலாக ட்வீட்டரில் சிரித்துள்ளார்..

கார்ட்டூன் கேலரி