டெல்லி: 73 நாட்களில் COVISHIELD தடுப்பூசி கிடைப்பது குறித்த தற்போதைய ஊடகக் கூற்று தவறானது சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் 200  நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முன்னணி நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மொத்தம் 3 தடுப்பூசிகள் மனிதர்களுக்கான பரிசோதனை அளவில் உள்ளன. டிசம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

அதே நேரத்தில்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட், இன்னும் 73 நாட்களில் சந்தையில் மக்களுக்கு கிடைக்கும் என்று ஒரு தகவல் வெளியானது.

இந் நிலையில் இதில் உண்மையில் சீரம் இன்ஸ்டியூட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து சீரம் இன்ஸ்ட்டியூட் கூறி இருப்பதாவது:

73 நாட்களில் COVISHIELD தடுப்பூசி கிடைப்பது குறித்த தற்போதைய ஊடகக் கூற்று தவறானது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். 3ம் கட்ட சோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. அது கிடைப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது.