பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சர்வர் சுந்தரம்’.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 31-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் சந்தானம் நடிப்பில் உருவான ‘டகால்டி’ படம் வெளியானதால், ‘சர்வர் சுந்தரம்’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

பின் பிப்ரவரி 14-ம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.