டெல்லி: தற்போதுள்ள 15 சதவீத இருந்து சேவை வரி விதிப்பை 16 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

இதனால் விமானப் பயணம், ஓட்டல்கள், போன் பில் உள்ளிட்ட இதர சேவைகளின் கட்டணம் உயரும். இதன் மூலம் ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரத்தை ஓட்டிய வரி விதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக சேவை வரி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி.யில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 1ம் தேதியில் இருந்து அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஎஸ்டி முன் கூட்டியே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் சேவை வரியை 0.5 சதவிதம் உயர்த்தி 15 சதவீதமாக ஆக்கினார் அருண்ஜேட்லி.

இதிலிருந்து மேலும் ஒரு சதவீதம் இந்த பட்ஜெட்டியில் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மேலும், பலதரப்பட்ட சேவை வரி விதிப்புகள் இருக்கும் என்றும், குறைந்தபட்சம் 12 சதவீதம் முதல் அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான சேவை வரி விதிப்பு இருக்கும் என்று வரி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வரியை அதிகமாக உயர்த்துவதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி மத்திய அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. பணமதிப்பிழப்பால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை சீர் செய்யவும் இது உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சேவை வரி என்பது மத்திய அரசின் கையில் உள்ளது. இதை மாநில அரசுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேவை வரி மூலம் 2016&17ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ரூ. 2.31 லட்சம் கோடி வருவாய் நிதி ஆதாரம் திரட்டப்பட்டது. இது தற்போது ரூ. 16.30 லட்சம் கோடியாக உயர்த்தப்படவுள்ளது. இந்த முறையோடு சேர்த்தால் மொத்தம் 3வது முறையாக சேவை வரியை அருண்ஜேட்லி உயர்த்தவுள்ளார்.