மறைந்த ஸ்ரீதேவிக்கு ‘மணல் சிற்பம்’ அமைத்து அஞ்சலி!

ஒடிசா:

றைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் அமைத்துள்ளார். இந்த சிற்பத்தை காணும் ஏராளமானோர் அதற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தென்னிந்திய படம் அல்லாது இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து, தனக்கென்று தனிப்பாணி அமைத்தவர் நடிகை ஸ்ரீதேவி. 54 வயதான அவர், துபாயில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல் இன்று இரவு இந்தியா கொண்டு வரப்படும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் அமைத்துள்ளார்.

சுதர்சன் பட்நாயக்கும், அவரது மாணவர்களும் பூரி கடற்கரையில் ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த சிற்பத்துக்கு அப்பகுதி மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பங்களாக செதுக்கி உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி