டில்லி,

ராமர் பாலம் குறித்த வழக்கில் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் நோடீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்த திமுக பெரிதும் முயற்சி செய்து வந்தது. ஆனால், அதற்கு அதிமுக, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சேது கால்வாய் அமைப்பது தொடர்பாக  பச்சோரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அதையடுத்து, மத்திய அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த   அபிடவிட்டில், ‘’ராமர் பாலத்தை, புராதன சின்னமாக அறிவிக்கலாம்; மத்திய அரசு இத்திட்டத்தை அமல்படுத்த கூடாது. சேது சமுத்திர திட்டத்தை, நிறைவேற்றுவது உகந்ததல்ல என்ற பச்சோரி குழுவின் அறிக்கையை ஏற்கிறோம் ’’ என்று, வேண்டாம் என்பதற்கான அனைத்து காரணங்களும்  கூறப்பட்டு இருந்தது

அதைத்தொடர்நது, சேது சமுத்திரத்தை திட்டத்தை, ஏற்கனவ உள்ள பாலத்தை  இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேதுசமுத்திர திட்டத்தை அமல்படுத்தக் கோரி,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இந்த வழக்கை தொடர்ந்தனர்.

2013-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவித்து, பாலம் அமைந்துள்ள பகுதியில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான  சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, உரிய அவகாசம் அளித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறப்பட்டது.  மேலும், எந்தெந்த வழியில் நிறைவேற்றப்போகிறார்கள் என்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது என்றும் மத்திய அரசை குறை கூறினார்.

அதைத்தொடர்ந்து,  சேது சமுத்திர திட்டம் குறித்த தங்களது நிலைப்பாடு குறித்து மத்திய அரசு 6 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.