லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்….உச்சநீதிமன்றம்

டில்லி:

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக சட்டசபையில் சமீபத்தில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இது குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. லோக் ஆயுக்தா, லோக்பால் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் 19ம் தேதி தேர்வுக்குழு கூட உள்ளது என்று மத்திய அரசின் வக்கீல் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், உறுப்பினர்கள் நியமனம் குறித்தும் வரும் 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.