Random image

ஜப்பானில் பயங்கர நில நடுக்கம்….சுனாமி எச்சரிக்கை இல்லை

டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 என்ற அளவில் பதிவானது.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. பேரிடர் மீட்டு குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.