திருப்பூர் பாப்பம்மாள் விவகாரம்: வன்கொடுமை சட்டத்தில் 7 பேர் கைது

திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பெண்ணான பாப்பம்மாள் என்பவரை  சமையல்காரராக  நியமனம் செய்தது தொடர்பாக, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, 7 பேரை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்படி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அருகே உள்ள  திருமலைக்கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளிக்கு, அந்த பகுதியை சேர்ந்த அருந்ததி யினர் இனத்தை  சேர்ந்த பாப்பம்மாள் என்பவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. அந்த பெண்மணி, அங்கு படித்து வரும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வந்தார்.

இதையறிந்த அநத பகுதி மக்கள், பாப்பம்மாள் சமையல் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இழி சாதியில் பிறந்த நீ எப்படி எங்கள் பிள்ளைகளுக்கு சமைத்து போடுவதாக  என கூறி, அந்த பெண்ணை சமையல் கூடத்தில் இருந்து வெளியேற்றினர். பாப்பம்மாள் இங்கே பணிபுரிந்தால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மிரட்டினர். பள்ளி ஆசிரியர்களும், இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்தனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும், சர்ச்சை ஏற்பட்டது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இந்த பிரச்சினையை கையிலெடுத்து போராட்டங்களை நடத்தியது.

இதையடுத்து சாதியை காரணம் காட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக செய்ரு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், பாப்பம்மாளை சாதியை கூறி திட்டியதாக 7பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமலை கவுண்டம் பாளையத்தை சேர்ந்த   பழனிசாமி (வயது 60), சண்முகம் (வயது 40), மற்றும் ஏழுரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 42), மூர்த்தி (வயது 47), கந்தசாமி (வயது 42), பாப்பன் தோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 40), மூர்த்தி (வயது 27). இந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மீது தீண்டாமை வன்கொடுமை சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: abusing school cook over her caste in Tiruppur, Seven arrested for harassing, திருப்பூர் பாப்பம்மாள் விவகாரம்: வன்கொடுமை சட்டத்தில் 7 பேர் கைது
-=-