இலங்கை குண்டு வெடிப்பு : 7 பேர் கைது

கொழும்பு

லங்கையில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று கொழும்பு நகரில் காலை 8.45 மணி முதல் எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மற்றும் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளதால் மரணமடைந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து இலங்கை அமைச்சர் ருவான் விஜயவர்தன, “இன்றைய குண்டு வெடிப்பு நிகழ்வு எட்டு இடங்களில் நடந்துள்ளன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 8 வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தியவர்கள் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலானவை தற்கொலைப் படை தாக்குதல் ஆகும். இந்த சம்பவங்கள் குறித்த விசாரணை மேலும் தொடர்ந்து வருகிறது” என கூறி உள்ளார்.