தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலில் டாக்டர் காமராஜ் தலைமையில் ஏழு பேர் போட்டி

சென்னை:

மிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாலியல் மருத்துவ நிபுணரும், இந்திய பாலியல் சங்க தலைவருமான டாக்டர் காமராஜ் தலைமையில் ஏழு  பேர் அணி போட்டியிடுகிறது.

இதுகுறித்து, டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் நூறு  ஆண்டு பாரம்பரியம் கொண்டது. இதில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவர்களின் நலனுக்காக முக்கியமான மூன்று  வாக்குறுதிகளை முன்வைத்து, எனது தலைமையில் டாக்டர்கள் ரெக்ஸ். சற்குணம், காசி, பொன்னம்பலம், மணிவேலன், சந்திரசேகர்,  ராம்குமார் ஆகிய ஏழு பேர் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

மத்திய அரசு, அகில இந்திய அளவில் செயல்படும் இந்திய மெடிக்கல் கவுன்சில் அமைப்பை நீக்கிவிட்டு நியமன உறுப்பினர்களை நிர்வகிக்க முடிவு செய்துள்ளது. தங்களுக்கு சாதகமான சில முடிவுகளை எடுப்பதற்காகவே இரு  ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

அதேபோல், எம்பிபிஎஸ் படிக்காமலேயே சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகள் படிப்பவர்களும் நவீன மருத்துவம் செய்யும் வகையில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டுவர முயற்சிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது என்று தெரிந்தும் கூட யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  நாங்கள் வெற்றி பெற்றால், மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிராக குரல் கொடுப்போம்.

நீட் தேர்வுக்கு எதிராகவும் பல போராட்டம் நடத்தியிருக்கறோம்.

தற்போதுள்ள அமைப்பு டாக்டர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.  நாங்கள் பொறுப்புக்கு வந்தால், தண்டனைக்கு பதில் டாக்டர்களின் அறிவை மேம்படுத்த மாநிலம் முழுவதும் கருத்தரங்கம் நடத்துவோம். டாக்டர்களின் குறைகளை பகிர்ந்து கொள்ள பயிற்சி பட்டறைகள் நடத்துவோம்.

திர்காலத்தில் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்காமல் இருக்க ஆன்லைன் ஓட்டிங் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். மருத்துவர்களுக்காக நியூஸ் அண்டு வியூவ்ஸ் என்ற பெயரில் பத்திரிகை தொடங்கப்படும். எதிர்காலத்தில் முறைகேடு இல்லாத நேர்மையான நிர்வாகம் நடத்த நடவடிக்கை எடுப்போம்” என்று டாக்டர் காமராஜ் தெரிவித்தார்.