பெங்களூரு:

ர்நாடக மாநிலம் கனகபுரா அருகே உள்ள மரிகவுடானா தோடி என்ற கிராமப்பகுதியில், 7தலை போன்ற அமைப்புடன் பாம்பின் தோல் ஒன்று காணப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் குங்குமம் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு நகரிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கனகாபுரா இங்குள்ள டோடி என்ற கிராமத்தில் சிறிய கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தோலானது பார்ப்பதற்கு பல தலைகளைக் கொண்ட நாகம் போன்று இருப்பதால், இது 7 தலை நாகத்தின் தோல் என்று தகவல் பரவியது.

இதன் காரணமாக அக்கம் பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு வந்து பாம்பின் தோலை பார்த்து வரும் நிலையில், சிலர் பக்தியின் உச்சமாக, அதற்கு அருகே உள்ள கல்லில் மஞ்சள், குங்குமம் வைத்து வழிப்படத் தொடங்கி உள்ளனர்.

7தலை நாகம் என்பது கதைகளில் மட்டும் நான் படித்திருப்போம். உண்மையில் அப்படி ஒரு நாகம் இல்லை என்றே கூறப்படுகிறது.

இருந்தாலும், மக்கள், இதிகாச கதைகளில் கூறப்பட்டுள்ளது போல, காணப்படும் நாகத்தின் தோலானது 7 தலை நாகத்துடைய என்றும், இந்த பகுதியில் 7 தலை நாகம் உள்ளதாகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய கோவில் ஊழியர் ஒருவர், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற ஒரு தோல் கிடந்ததாகவும், தற்போது மீண்டும் அதுபோல் தோல் காணப்படுகிறது, அதனால் இந்த பகுதியில் 7தலை நாகம் இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.