மாலி குண்டுவெடிப்பில் 7 ராணுவ வீரர்கள் பலி

பமாகோ:
மாலி நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாலி நாட்டில் ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஓவரும் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.