நாமக்கல் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை 75வயது முதியவர் உள்பட 7 பேர் கைது

நாமக்கல்:  சேலம் அருகே ராசிபுரம் பகுதியில்  2 சிறுமிகள்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்தது தொடர்பாக  75வயது முதியவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போக்சோ கடத்தில் காவல்துறையினர் சிறையில் அடைந்தனர்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கி வருகின்றன.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.  அதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், அந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், 2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள் 2 பேரும் 12 மற்றும் 13 வயதுடையவர்கள். இது தொடர்பாக   75 வயது முதியவர் முத்துசாமி உட்பட சிவா, சூர்யா, சண்முகம், மணிகண்டன், செந்தமிழ்செல்வம் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.