மெரினாவில் இறப்பை தடுக்கும் வகையில் 7 உயர் பாதுகாப்பு கோபுரம்: கடலோர காவல்படை தகவல்

சென்னை:

டலில் குளிக்கும்போது அலையால் இழுத்துச்செல்லப்பட்டும், தண்ணீரில் மூழ்குவதாலும்  ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கடற்கரையில் பாதுகாப்பு கோபுரங்களை, சுற்றுலாத்துறையுடன் இணைந்து  அமைக்க கடலோர காவல் படை நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் 7 உயர் பாதுகாப்பு கோபுரம் அமைக்கப்படும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடலில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் பலி எண்ணிகை உயர்ந்துவருகிறது.

இதையடுத்து, கடற் கரையோர  பகுதிகளில்  கண்காணிப்புக் கோபுரங்களை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கடலோர காவல்படை  அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு   மே 31ந்தேதி வரையில் 5 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு 19 பேரும், 2016ம் ஆடு 40 பேரும் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரி,  இது தங்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் கூறினார்.

கடற்கரை பகுதியில்  சுற்றுலா தலங்கள் இருப்பதால், அங்கு வருபவர்கள் கடற்கரைக்கும் வந்து, கடலில் இறங்கி நீராட முயற்சி செய்கின்றனர். இதை காவல்துறையினர் தடுக்க முயன்றாலும், அதை மீறி பார்வையாளர்கள் கடலில் மூழ்கிவிடுகின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால், கடல்நீரின் போக்கு மற்றும் கடலின் ஆழம் மாறுபடும், அதன் காரணமாக , கடலில் நீச்சல் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டும். இந்த நேரங்களில் கடலில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், சென்னை,  கடலூர், வேதாரண்யம், கன்னியாகுமாரி, ராமநாதபுரம் போன்ற கடல் பகுதிகளும் அபாயகரமானவை என்றும் கூறினார்.

கடலில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில்,கடலோர காவல்படையும், சுற்றுலாத்துறையும் இணைந்து கடற்கரையில் பாதுகாப்பு கோபுரம், அவசர உதவிக்கு தேவையான படகு, பாதுகாப்பு உபகரயங்கள்,லைப் ஜாக்கெட் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே கடலோர பாதுகாப்புக்காக தமிழகம் முழுவதும் 21 மோட்டார் படகுகள்  இருப்பதாகவும், சென்னையில் 2 படகுகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

சென்னை மெரினாவில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  7 உயர் பாதுகாப்பு  கோபுரங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளவும்,  கடலில் மூழ்குபவர்களை காப்பாற்ற மீனவர்களுடன் இணைந்து குழு அமைக்க  பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஏற்கனவே கடலில் மூழ்கிய பலரை கடலோர பாதுகாப்பு படை காப்பாற்றி உள்ளதாகவும், கடலில் மூழ்கினால், அதுகுறிது உடனே  1093 என்று எண்ணுக்கு அழைத்தால் உடனே கடலோர பாதுகாப்பு படையினர் உதவிக்கு ஓடோடி வருவார்கள்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு கடலில் மூழ்கியவர்களின்   261 பேரை காப்பாற்றி இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.