75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்:

ன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து  செல்ல முயன்ற  கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது. திருப்பூர், அவிநாசி மற்றும் பல்லடம் பகுதியிலுள்ள வட மாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

அவ்வகையில், தொழிலாளர்கள் பல ரயில் மற்றும் வேன் உட்பட வாகனங்களில், சொந்த ஊருக்கு செல்கின்றனர். இச்சூழலில், திருப்பூர் அருகே ஊத்துக்குளி – புலவர்பாளையம் போலீஸ் செக்போஸ்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே கன்டெய்னர் லாரி ஒன்றில் சோதனையிட்டனர். அதில், 75 வட மாநில தொழிலாளர்கள் இருந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோரிடம் விசாரித்தனர்.

அதில், திருப்பூரில் இருந்து, 75 பேரை அழைத்து கொண்டு, பீகார் மாநிலம் செல்வது தெரிந்தது.இதனால், அரசு உத்தரவை மீறியும், நோய் தொற்று ஏற்படும் வகையில், தொழிலாளர்களை அழைத்து சென்ற கன்டெய்னர் லாரி டிரைவர், கிளீனர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.