புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்டடுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் இந்த் போஸ்டர்களை ஒட்டியவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போஸ்டர்களை ஒட்டியது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் மிகப்பெரிய இரண்டாவது அலைக்கு மத்தியில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் “மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பூசிகளை ஏன் கப்பலில் அனுப்பினீர்கள்?”

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது சொத்துக்களை சிதைப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 மற்றும் 17 முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி போஸ்டர் விவகாரம் தொடர்பாக, கிழக்கு டெல்லியின் கல்யாண்புரியில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் திரேந்தர் குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் மிகப்பெரிய இரண்டாவது அலைக்கு மத்தியில், இந்தியாவும் ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பது குறிபிடத்தக்கது.