பாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

பெஷாவர் நகரின் காலனி பகுதியில் உள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது பாடசாலையில் இருந்தவர்களில் 7 பேர் பலியாகியுள்ளனர், 70 பேர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது: முதல் கட்ட விசாரணையில் குண்டுவெடிப்பிற்கு 5 கிலோ வரை வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாதமும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவித்தனர்.