‘வைரமுத்து குறித்து பல பெண்கள் தன்னிடம் கூறினர்:!’ ஏ.ஆர்.ரகுமான் சகோதரி திடுக்கிடும் தகவல்

சென்னை:

மிழக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட சிலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ள நிலையில், ‘வைரமுத்து நடவடிக்கைகள் குறித்து  பல பெண்கள் தன்னிடம் கூறியுள்ளனர் என்று பிரபல இசை அமைப்பாள்ர் ஏ.ஆர்.ரகுமான் சகோதரி  ஏ.ஆர்.ரைஹானா தெரிவித்து உள்ளார்.

இது வைரமுத்து மீதான  மீடூ விவகாரத்தில் மேலும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் தொடர்பான தகவல்களை டிவிட்டரின் மீ டூ ஹேஸ்டேக்கில் பல பெண்கள் பதிந்து வருகின்றனர். இதில், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பல பெண்கள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவர் வைரமுத்து மீது  பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதாக, பத்திரிகையாளர்  சத்யா மேனன், அந்த தகவலை மீ டூ ஹேஷ்டேக்கில் பகிர்ந்தார். அதில், அந்த பெண், எனக்கு 18 வயதாக இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். கோடம் பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.இது எனக்கு நடந்தது. அது தான் உண்மை. எனது பெயரை வெளியில் கூற நான் விரும்பவில்லை என்று பதிவிடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, பிரபல பாடகி பாடகி சின்மயி ஸ்ரீபிரதா உள்ளிட்ட பிரபலங்கள் அதை ரீ டிவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து  பிரபல பாடகியான சின்மயியும் வைரமுத்து பாலியல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். மேலும், கர்நாடக இசைக்கலை ஞர்கள் டி.என். சேஷகோபாலன், ரவி கிரண், சசிகிரண், பிராமணர் சங்க தலைவர் நாராயணன் உள்பட பலர்மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அதைத்தொடர்ந்து வைரமுத்து மீது பல பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதுபோல திரையுலகை சேர்ந்தவர்கள் மீது பல பெண்கள் குற்றச்சாட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் ஏர்.ரகுமானின் தங்கையும், இசை அமைப்பாளருமான  ஏ.ஆர்.ரைஹானாவும், வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்பதுபோல கருத்து தெரிவித்து உள்ளார்.

“வைரமுத்து பற்றி பல பெண்கள் என்னிடம் சொன்னார்கள். அது திறந்த  இரகசியம்.. பலர் அதை எதிர் கொண்டுள்ளனர். நான்  கவுரவமான முறையில் நடந்துகொள்கிறேன், ஏனெனில் நான் அப்படிப்பட்ட விஷயங்களைச் சந்திக்கவில்லை. அவர்களில் பெரும்பாலோர் இத்தகைய வழக்கில் என்னிடம் பேசுவதற்கு பயப்படுகிறார்கள், “என அவர் கூறி உள்ளார்.

மேலும் திரைத்துறையில்  வைரமுத்து  புகழின் உச்சத்தில் இருக்கிறார் என்றும், தன்னை யாரும் இதுபோல் தொந்தரவு செய்யவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

அவர்களின் தகவல் காரணமாக வைரமுத்து மீது  குற்றம் சாட்டுவதற்கு தனக்கு   உரிமை இல்லை என்ற ரைஹானா, “ஒரு குற்றம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்து ஏதாவது கூறினால், அது நீதிமன்ற வழக்கு ஆகிவிடும்.  ஆனால், வைரமுத்து  தங்களிடம்  மிகுந்த மரியாதை காட்டினார்.  அதனால், நான் எவ்வாறு அவர்மீது  குற்றம் சொல்ல முடியும்? எனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரால், துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் அதைப் பற்றி புகாரளிக்க வேண்டும். நான் ஒரு முறை அவரை சந்தித்தேன், அவரது பாடல் மிகவும் நன்றாக இருந்தது குறித்துபேசினேன். அவர்  மரியாதைக்குரிய விதத்தில் சிரித்தார். 

இவ்வாறு ரைஹானா கூறி உள்ளார்.