சென்னை:

ரடங்கு தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருந்தும், ஏராளமானோர் வெட்டியாக வாகனங்களில் ஊற்றி சுற்றி வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன்,  ஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி வாங்குவதாக கூறி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பைக்கில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,01,964 பேர் கைது – 78,240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறிய ஆணையர், தற்போது கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

அத்தியாவசியப்பொருட்களை தேவைப்படுவோர்  வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியவர், , வயதானவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.