டில்லி

ரவு-செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத தொண்டு நிறுவனங்க்ள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து பண உதவி பெரும் தொண்டு நிறுவனங்கள் தங்களின் வரவு செலவுக் கணக்கை ஜுன் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.   ஆனால் இதுவரை 10000க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் கணக்கை காட்டவில்லை.  இந்த நிறுவனங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் தொண்டு நிறுவனங்கள் FCRA (Foreign contribution regulation act)இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.  இதுவரை அப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 10256 நிறுவனங்கள் தங்களின் வரவு செலவு கணக்கை அரசுக்கு தரவில்லை.  இந்த நிறுவனங்கள் இப்போது சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் கடும் நடவடிக்கை இந்நிறுவனங்கள் மேல் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.

இந்நிறுவனங்களுக்கு முதலில் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதை தற்காலிகமாக தடை செய்யப்படும்.  அதற்குப் பிறகும் அவர்களால் சரியான கணக்கை காட்ட முடியவில்லை எனில் தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்