வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் இனவெறியுடன் தொடர்ந்து பேசி வருவதாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அமெரிக்க நாட்டில் பல நாட்டினர் வசித்து வருகின்றனர்.  அவர்களில் அடுத்த தலைமுறையினர் குடியுரிமை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.  அவ்வாறு கருப்பினத்தவரான ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார்.  அத்துடன் பலர் தற்போது அரசின் பெரும் பதவிகளிலும் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் வேற்று நாட்டவர் அமெரிக்காவுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே.   அது மட்டுமின்றி ஒரு பெரிய எல்லைச் சுவர் அமைக்கும் திட்டத்தையும் நடத்த முற்பட்டார்.  பாராளுமன்றம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   இருந்த போதிலும் டிரம்ப் பலமுறை வெளிநாட்டினரை கருப்பர் என கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் குறித்து டிரம்ப் அவர் அமெரிக்க மண்ணில் பிறக்காததால் அவர் அதிபர் ஆக தகுதியற்றவர் என தெரிவித்துள்ளார்.   ஆப்பிரிக்க மக்கள் பலர் அமெரிக்காவில் நுழைந்து இந்நாட்டை கெடுத்துள்ளனர் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.    சமீபத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்களை குறித்து அவர் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் டிரம்ப், ”முன்னேற்றமான குடியரசுக் கட்சி பெண்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்த அரசு முழுவதுமாக பேரழிவை சந்தித்தது ஆகும்.  அவை உலகிலேயே மோசமான, மிகுந்த ஊழலுள்ள நாடுகள் ஆகும்.

உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் அரசு எவ்வாறு நடக்க வேண்டும் என அந்நாட்டு பெண்கள் நமக்கு அறிவுரை அளிக்கிறார்கள்.

அவர்கள் நமது நாட்டை விட்டு வெளியேறி அவர்கள் வந்த நாட்டை முழுமையாக உடைவதில் இருந்தும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்தும் காக்க முயற்சி செய்யலாம்.  ” என பதிந்துள்ளார்.

அவர் பெயரை குறிப்பிடாவிட்டாலும் நியூயார்க்கின் அலெக்சாண்டிரியா ஒகாசியோ,  மினசோட்டாவின் இல்ஹான் உமர், மிசிகனின் ரஷிதா திலைப் மற்றும் மாசசூசெட்ஸின் அயன்னா பிரெஸ்லி ஆகியோர் என்பதை அனைவரும்  அறிந்த ஒன்றாகும்.

டிரம்பின் இந்த டிவிட்டுக்கு நால்வரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இதற்கு அமெரிக்க செனட்டர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  டிரம்ப்புக்கு இனவெறி அதிகமாக உள்ளதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.