நேப்பியர்:

நியூசிலாந்தில் இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதல் 1நாள் போட்டி நடைபெற்று வந்த நிலையில், மாலைவெயிலின்  தாக்கம் காரணமாக கண்கள் கூசியதால், போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

வெயிலுக்காக போட்டி இடை நிறுத்தப்பட்டது கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முறை என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அங்கு வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஆஸ்திரேலி அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இன்று முதல்நாள் போட்டி நேப்பியரில் உள்ள மெக்ளேரன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து  அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்குச் சுருண்டது.  இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3, சாஹல் 2 விக்கெட்டுகளையுடம் வீழ்த்தினர்.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மாலை வெயில் காரணமாக ஆட்டம் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கள நடுவர்கள் அறிவித்தனர்.

மாலைநேர வெயில் உக்கிரமாக இருந்ததாலும், கதிரவனின் கதிர்கள்  பேட்ஸ்மேன்களின் கண்களில் நேரடியாப்பட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  நடுவர்களில் ஒருவரான ஷான் ஹெய்க்,  தனது  14 வருட கிரிக்கெட் வாழ்வில் இதுபோன்று நடைபெறுவதும் இதுதான் முதல்முறை என்று கூறினார்.

பொதுவாக மழை காரணமாகத்தான் போட்டிகள், ஆட்டங்கள் நிறுத்தப்படுத்துவம், ஓவர்கள் குறைக்கப்படுவதும் வழக்கம்.  ஆனால், வெயில் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படு வது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக 2014ம் ஆண்டு தோனி நேப்பியரில் விளையாடிய போது, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.