குஜராத் :  பாஜக முன்னாள் துணைத் தலைவர் மீது செக்ஸ் புகார்

சூரத்

சூரத் தொகுதி முன்னாள் பாஜக எம் எல் ஏ மீது 21 வயதுப் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

குஜராத் மாநில பாஜக உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் அடிக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.   இதனால் பல சர்ச்சைகள் உண்டாகின்றன.   கடந்த வருடம் கட்ச் அருகே உள்ள நலியா காவல் நிலையத்தில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை 10 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.  அந்த புகாரில் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் கைதானார்.

சென்ற வாரம் 21 வயதான ஒரு பெண் சூரத் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் குஜராத் மாநில முன்னாள் துணைத்தலைவருமான  கட்ச் பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் ஜயந்தி பனுசாலி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில் பனுசாலி தனக்கு ஒரு தனியார் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாகவும் தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை தருவதாகவும் தெரிவித்தார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அந்தப் பென் தனது புகார் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வில்லை என கூரினார்.  மேலும் தனக்கு பனுசாலி அளித்த பாலியல் தொல்லைகள் குறித்தும் விவரித்தார்.    அவருடைய  இந்த பேட்டிக்கு பின் சூரத் காவல்துறையினர் அவர் மீது புகார் பதிந்து விசாரனைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.  அவர் “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் எனக்கும் திருமணம் ஆகி விட்டது.    அவரை திருமணம் செய்த இரு மாதங்களிலேயே அவருக்கு பலருடன் தகாத உறவு இருப்பது தெரிய வந்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டேன்.   அவர் இது போலவே பல ஆண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு அரசியல்வாதிகளின் தொடர்பும் உள்ளது.  முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய பாஜகவில் சட்டப்பேரவை உறுப்பினருமான சாபில் படேல் இந்தப் பெண்ணை நான் விவாகரத்து செய்ததற்காக என்னை மிரட்டி இருக்கிறார்.    பனுசாலிக்கும் சாபிலுக்கும் இடையே அரசியல் தகராறு இருந்து வருவதால் அந்தப் பெண்ணை அவர் தூண்டி விட்டிருக்கலாம்” என கூறி உள்ளார்.

இதற்கு சாபில் மறுப்பு தெரிவித்துள்ளார்.  தம்மை கைது செய்து விடுவார்கள் என்னும் பயத்தினால் பனுசாலி என்னை தேவை இல்லாமல் இந்த விவகாரத்தில் இழுத்து விடுவதாக கூறி உள்ளார்.

பாஜகவின் மற்றொரு தலைவர் ஒருவர் ”கட்ச் பகுதியில் உள்ள அனைவருக்கும் பானுசாலி ஒரு பிளாக் மெயிலர் என்பதும் நில அபகரிப்பாளர் என்பதும் தெரியும்.   பலரை இவர் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று இனிமையான வார்த்தைகளை கூறி ஏமாற்றி உள்ளார்.   இந்தப் பெண் போல பல பெண்கள் மானத்தையும் பல ஆண்கள் பணத்தையும் இவரால் இழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜயந்தி பனுசாலி தனது கருத்தை இன்னும் தெரிவிக்கவில்லை.

கார்ட்டூன் கேலரி