உத்தரகாண்ட் : நீக்கப்பட்ட பாஜக செயலர் மீது செக்ஸ் புகார்

டேராடூன்

மீபத்தில் நீக்கப்பட்ட பாஜக செயலர் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில பாஜகவில் பொதுச் செயலராக பதவி வகித்தவர் சஞ்சய் குமார். இவர் சுமார் ஒரு வாரம் முன்பு கட்சிப் பொறுபுக்களில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு அவர் மீது எழுந்த பாலியல் புகாரே காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதை பாஜக தலைமையகம் மறுத்து அவர் பொறுப்புக்களில் இருந்து விலக விரும்பியதாக கூறி உள்ளது.

தற்போது ஒரு ஆங்கில நாளேடு சஞ்சய் குமார் மீது ஒரு பெண் பாஜக ஊழியர் பாலியல் புகார் அளித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பெண் தன்னை டில்லியை சேர்ந்தவர் எனவும் டேராடூனில் கடந்தா 2006 ஆம் வருடம் முதல் வசிப்பதாகவும் அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார்.

அந்தப் பெண், “கடந்த பிப்ரவரி மாதம் முதல் நான் பாஜக அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறேன். கட்சிக்கு வரும் நிதிக்கான காசோலைகளை கணினியில் பதிவு செய்வது எனது வேலை ஆகும். நான் பணியில் இருக்கும் போது அக்கட்சியின் பொதுச் செயலர் சஞ்சய் குமார் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

அவர் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவார். எனக்கு கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றார். அத்துடன் பல ஆபாச புகைப்படங்களை எனக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புவார். அத்துடன் அவருடைய அந்தரங்க உறுப்பின் படத்தை அனுப்பி விட்டு உடனடியாக அழித்து விடுவார்.

இது குறித்து நான் அளித்த புகார்கள் மீது யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நான் அலுவகம் செல்வதை குறைத்துக் கொண்டேன். அத்துடன் எனது புகாருக்கு ஆதாரம் தேவை என சிலர் கூறினார்கள். ஆனால் என்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
எனது தோழிகள் சொற்படி நான் அவருடைய தொலைபேசி அழைப்புக்களில் பேச ஆரம்பித்தேன். அத்துடன் அவர் பேசுவதை நான் பதிவு செய்தேன். தேவையான அளவு ஆதாரம் கிடைத்ததும் நான் சஞ்சய் குமார் குறித்து பாஜக தலைவர்களிடம் புகார் அளித்தேன்.

இதை அறிந்த சஞ்சய் குமார் சில பாஜக தொண்டர்களிடம் சொல்லி எனது மொபைலை பிடுங்கி வரச் சொல்லி உள்ளார். அவர்களும் எனது மொபைலை பிடுங்கிச் சென்றனர். அதன் பிறகு நான் காவல்துறையினரிடம் புகார் அளித்ததும் எனது மொபைலை திருப்பி தந்தனர். அதன் பிறகு சொந்த வேலைக்காக டில்லி சென்று விட்டேன்.

அதன் பிறகு இந்த மாதம் 4 ஆம் தேதி இந்தி செய்தித்தாள் ஒன்றில் எனது புகார் குறித்து செய்தி வந்தது. அதன்ப் பிறகு சஞ்சய் குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிந்தேன். என்க்கு இப்போது டேராடூன் திரும்ப பயமாக உள்ளது. ஏனெனில் சஞ்சய் குமாருக்கு மாநிலத்தில் அவ்வளவு செல்வாக்கு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி வந்த பிறகு டேராடூன் காவல்துறை சூப்பிரண்ட் சரிதா தோபால், “அந்தப் பெண் தனக்கு பாதுகாப்பு தேவை என எவ்வித புகாரும் அளிக்கவில்லை. அந்தப் பெண் டேராடூன் வரட்டும். நாங்கள் அவருடன் பேசி அவர் வாக்குமூலத்தை பதிவு செய்ய எண்ணி உள்ளோம். அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதிய முடியும்” என தெரிவித்துள்ளார்.