செக்ஸ் டாக்டர் காமராஜ் மகன் போதையில் கார் ஓட்டி விபத்து… கைது: மூவர் படுகாயம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று, சொகுசு கார் மோதியதில், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில் பிரபல செக்ஸ் டாக்டர் காமராஜின் மகன் ஆகாஷ்,  (என்கிற) சித்தார்த் போதையில் காரோட்டி விபத்தை ஏற்படுத்தியதாக  கூறப்படுகிறது.

காமராஜ் மற்றும் விபத்தை ஏற்படுத்திய அவரது மகன் ஆகாஷ்

நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை வேகமாக வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து, பிளாட்பாரத்தில் இருந்த டூவீலர்கள் மீது மோதியது. இதில் பிளாட்பாரத்தில் இருந்த மூவர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், படுகாயமுற்ற மூன்று பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறை விசாரணையில், காரை ஓட்டியது ஆகாஷ் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அவரிடம், பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கார்

இளைஞர் ஆகாஷ் மது போதையில் காரோட்டி வந்த்தாக கூறப்படுகிறது. இவர், பிரபல செக்ஸ் டாக்டர்  காமராஜின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

டாக்டர் காமராஜ், சென்னை வடபழனியில் தனது மகன் ஆகாஷ் பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sex doctor kamaraj's son aakash was arrested for making accident and 3 injured in drunken mood, செக்ஸ் டாக்டர் காமராஜ் மகன் போதையில் கார் ஓட்டி விபத்து... கைது: மூவர் படுகாயம்
-=-