தெலுங்கு நடிகைகளை வைத்து விபசாரம்: அமெரிக்காவில் தெலுங்குபட தயாரிப்பாளர் தம்பதி கைது

சிகாகோ:

தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபசாரம் செய்த தெலுங்குபட தயாரிப்பாளர் தம்பதி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில், தற்போது வாய்ப்பில்லாத தெலுங்கு பட உலகத்தை சர்ந்த முன்னணி மற்றும் துணை நடிகைகளை கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக, தெலுங்கு படத்தயாரிப்பாளர் மொடுகுமுடி கிஷான் மற்றும் அவருடைய மனைவி சந்திராவை கைது சிகாகோ நகர போலீஸ் கைது செய்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கலாச்சார நிகழ்ச்சி நடத்துவதாகவும், மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தென்னிந்தியாவில் இருந்து  நடிகைகளை அழைத்துச் சென்று அங்கு வைத்து, அவர்களை வாடிக்கையாளர்களுடன் அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு நடிகைகள்

அமெரிக்காவில் உளள டல்லாஸ், நியூ ஜெர்சி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஓட்டல்களில் இந்த விபச்சாரம் நடைபெற்று வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிகாகோ விமான நிலையத்தில் இந்த தம்பதிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, இதுகுறித்த விவரங்கள் தெரிய வந்ததாகவும்,  அவர்களிடம் இருந்த மொபைலை கைப்பற்றி ஆராய்ந்தபோது, அதில்  அமெரிக்க அதிகாரிகள்,  மற்றும் தலைவர்களின் பெயர்கள்,  அவர்கள் பணியாற்றும் விவரம் போன்று  ஒவ்வொரு வாடிக்கையாளரின் பதிவுகள், விபச்சாத்தில் ஈடுபட்டு வரும் நடிகைகளின் புகைப்படங்கள், அவர்களின் சந்திப்பு மற்றும் அதற்கான நேரம், இடம் போன்ற  தகவல்கள் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த தெலுங்கு பட தயாரிப்பாளர் தம்பதி மீது  42 பக்க குற்றப்பத்திரிக்கையை சிகாகோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த  76 நடிகைகள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.