அகமதாபாத்,

செக்ஸ் அடிமையாக வளைகுடா நாட்டில் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு இந்தியா கொண்டு வந்தனர்.
சிலமாதங்களுக்கு முன் குஜராத் மாநிலம் தோல்கா என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு ரூ40 ஆயிரம்  சம்பளம் தருவதாக கூறி ஒரு கும்பல் துபாய்க்கு அழைத்துச் சென்றது. அங்கு ஒருவரது வீட்டில் சிலநாட்கள் வேலைசெய்த அந்தப் பெண்ணை அதே கும்பல் ரியாத்திலிருக்கும் மற்றொருவருக்கு விற்றுள்ளது.  அந்த வீட்டில் அந்தப் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை அதிகரித்தது.  அவர் திரும்ப திரும்ப பாலியல் வன்புணர்ச்சிக்கு  உட்படுத்தப்பட்டார்.

இந்தப்பெண் படும் துயரம் குறித்து குஜராத் அரசுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, மும்மையிலிருந்தும், குஜராத்திலிருந்தும் பெண்களை கடத்தும் நபர்களுடன் போலீசார் துபாய் பறந்தனர்.  அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை  குஜராத்துக்கு  கொண்டு வந்தனர்.  

இதுகுறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திரசின் குடாசாமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், அந்தப் பெண் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

பொதுவாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்தான் பெண்கடத்தல் கும்பல் அதிகம் என  செல்லப்படுவதுண்டு.

ஆனால்  இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குஜராத்தில்தான் பெண்களை கடத்தும் முகவர்கள் அதிகம் உள்ளதாக தெரிகிறது என்று கூறினார்.

வடஇந்தியாவிலிருந்து ஒருபெண் கடத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். வீட்டுவேலைக்காக செல்லும் பெண்களை விலங்குகளைப்போல் நடத்துவதாகவும், பாலியல் சித்திரவதையை தாங்கமுடியாமல் பல பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை தென் மாநிலங்களிலிருந்து பெண்களை கடத்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது வடஇந்திய பெண்களை நோக்கி தங்கள் வலைகளை வீசத் தொடங்கியுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.