‘செக்ஸ் டார்ச்சர்’ :  மாணவியை வீடு புகுந்து  சுட்டுக்கொன்ற பயங்கரம்..:

‘செக்ஸ் டார்ச்சர்’ :  மாணவியை வீடு புகுந்து  சுட்டுக்கொன்ற பயங்கரம்..:
உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் ரசூல்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் மாணவி அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.
அந்த மாணவி பள்ளிக்குச் செல்லும் சமயங்களில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர், அருவருப்பான வார்த்தைகளால் கிண்டல் செய்து ‘செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்துள்ளனர்.
அண்மையில் தன்னை கேலி செய்த 3 பேரையும் அந்த மாணவி திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும்  அந்த மாணவியின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து, அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
இதனை மாணவி எதிர்த்து சண்டை போட்டதால், 3 பேரும் மாணவியைச் சுட்டுக்கொன்று விட்டு ஓடி விட்டனர்.
இந்த பயங்கர செயலில் ஈடுபட்ட 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் பலாத்கார முயற்சியில் மாணவி சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,’’ உ.பி.யில். தலித்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன’’ என்று குற்றம் சாட்டியதுடன்’’ பா.ஜ.க.வின் ராமராஜ்யம் இதுதானா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-பா.பாரதி.