கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் பேரணி


கொல்கத்தா,
பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச உரிமை தினத்தை முன்னிட்டு கல்கத்தாவில் இன்று பாலியல் தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது.

கொல்கத்தாவில் சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பாலியல் தொழில் செய்யும் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

பேரணியில் பங்கேற்ற பெண்கள் கையில் பலகைகளையும் தட்டிகளையும் ஏந்தி வந்து சமூகத்தில் தங்களுக்கும் சம இடம் அளிக்குமாறு முழக்கங்களை எழுப்பினர்.

இந்தியாவில் பாலியல் தொழிலுக்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்படாத நிலையிலும் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை பாலியல் தொழில் செய்பவர்களாக பதிவு செய்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள சோனாக்கச்சியே  ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதியாகும்.

மும்பை மாநகரத்தில் அமைந்துள்ள காமத்திபுரம் தான் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாம்.

புனே மாநகரத்தில் புத்தக கடைகளால் சூழப்பட்டள்ள  புத்வார் என்ற பகுதியில் 5000 பேர் பாலியக் தொழிலில் ஈடுபடுபர்கள் இருக்கிறார்களாம்.

சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் பாலியல் பகுதி அலகாபாத் நகரம் மீர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது.

பல நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் விடுதிகள் நிறைந்த டெல்லியின் ஜி.பி ரோடுல் அமைந்துள்ளது.

சோனாகச்சி  பகுதியில் மட்டும் சுமார் 11,000 பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பெண் குழந்தை பிறக்கும்போதே பாலியல் தொழிலாளியாகப் பிறக்கும் கொடுமை காட்சி யாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.