காணொலி காட்சி மூலம் “வி தி வுமன்” என்ற தலைப்பில், தமிழ் நடிகை குஷ்பு, இந்தி நடிகை ஊர்மிளா உள்ளிட்டோருடன் பத்திரிகையாளர் பர்கா தத் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

அதில் பங்கேற்று பேசிய குஷ்பு, “அரசியலில் சினிமா நடிகைகள் நுழைந்து வெற்றி காண்பது மிகவும் கடினம்” என்று குறிப்பிட்டார்.

“ஒரு நடிகை சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தால், அவரை மரத்தை சுற்றி டான்ஸ் ஆடுபவராகத்தான் பார்க்கிறார்களே தவிர அவரது திறமையை பார்ப்பதில்லை” என குஷ்பு குற்றம் சாட்டினார்.

“சினிமாவை விட அரசியலில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்ட குஷ்பு, “அரசியலில் புத்திசாலித்தனமான, சுயமாக சிந்திக்கும் பெண்களை கண்டு அச்சப்படுகிறார்கள்” என்று மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஊர்மிளா “அரசியலில் ஆண்-பெண் பாலின பாகுபாடு அதிகம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

“அரசியலுக்கு வரும் பெண்களை எளிதாக குறி வைத்து தாக்குகிறார்கள்” என்றும் ஊர்மிளா தெரிவித்தார்.

– பா. பாரதி