சென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்றம்  தானாக முன் வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் விசாரணை நடைபெற உள்ளது.

தமிழக காவல்துறையில், சட்டம் ஒழுங்குப் பிரிவில் கூடுதல் டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸ், சமீபத்தில்,   பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக  கூறப்பட்டது.  கடந்த மாதம் முதல்வர் பழனிச்சாமி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோதுரு,  பாதுகாப்பு பணிகளை மேற்பாவையிட சென்னையில் இருந்து டிஜிபி ரஜேஷ் தாஸ், அங்கு,  மாவட்ட பெண் எஸ்பியிடம்  பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது இது தொடர்பாக  பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார்.

இதையடுத்து,   ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஜடி  4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.  பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் தற்போது காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து  (சுமோட்டோ) வழக்கை எடுத்துள்ளார். காவல்துறையில் உள்ள பெண் உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா..? என கேள்வி எழுப்பிய நீதிபதி இன்று பிற்பகல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்ளவதாகவும் தெரிவித்துள்ளார்.