பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

கோவையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஊட்டியைச் சேர்ந்த குமார் (வயது 32) கோவை போத்தனூர் கருணாநிதி நகர், பகுதியில் வசித்து வந்தார். கூலி வேலை செய்துவந்தார்.

இவர் அதே பகுதியிலுள்ள 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி மீது அமிலம் வீசிவிடுவதாக கூறி அவள் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் எல்லாம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் குமார். தற்போது அந்த பெண் கர்ப்பமானதை அறிந்த பெற்றோர்கள், சம்பவம் தொடர்பாக கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது அதிரடியாக கைது செய்தனர்.